ஹிந்து வணிகர்கள் தின விழா
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில், ஹிந்து வணிகர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து, தன் சொந்த செலவில் கப்பல் வாங்கி ஓட்டி, வணிகம் செய்து, கப்பலோட்டிய தமிழன் என்ற பெயர் பெற்ற, வ.உ.சி., பிறந்த நாளை ஹிந்து வணிகர்கள் தினமாக, ஹிந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பவானி கோயிலில் ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் விழா நடந்தது.
இதில், வ.உ.சி., மற்றும் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், ‘ஹிந்து வியாபாரிகள் நியாயமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். தேசப்பற்றுடன் ஹிந்து தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஹிந்து வியாபாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்