10 முதல் 95 சதவீதம் தள்ளுபடி என பட்டாசு கடைகள் விளம்பரம்: உண்மை விலை தெரியாமல் பொதுமக்கள் குழப்பம்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்டாசு விலையில் 10 முதல் 95 சதவீதம் வரை தள்ளுபடி எனக்கூறி வைக்கப்படும் விளம்பரங்களால் உண்மையான விலை தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பமடைகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை களைகட்டுகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக குறைந்தது 10 முதல் அதிகபட்சம் 95 சதவீதம் வரை தள்ளுபடி என கடைகளில் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் ஒரு சில கடைகளில் 63, 72, 81, 90 என ராசி எண்ணிற்கு ஏற்பவும் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.
இதனால் பட்டாசு வாங்க வருபவர்கள் உண்மையான விலை என்னவென்று தெரியாமல் குழப்பமடைகின்றனர். எங்கு சென்று பட்டாசு வாங்கலாம் எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.
தவிர சிவகாசியில் உள்ள ஒரு சில புரோக்கர்கள், வெளியூர் நபர்களை அடையாளம் கண்டு அதிக தள்ளுபடி பட்டாசு வாங்கி தருகிறோம் எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர்.
எனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் உண்மையான விலை குறித்த விபரங்களை தந்து முறைப்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டாசு வியாபாரி மகேஸ்வரன் கூறுகையில், குறைந்த சதவீத தள்ளுபடி பட்டாசு, அதிக சதவீத தள்ளுபடி பட்டாசு இரண்டையும் வாங்கி ஒப்பிட்டுப் பார்த்தால் பெரியளவில் விலையில் வித்தியாசம் இருக்காது. இது தெரியாமல் ஒரு சிலர் அதிக தள்ளுபடி விளம்பரத்தை நம்பி பட்டாசு வாங்கிச் செல்கின்றனர். இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் தான் தீர்வு காண வேண்டும். பட்டாசு தரத்திற்கு தகுந்தார் போல உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், என்றார்.
மேலும்
-
அம்மா உணவக பணியாளர்களுக்கு போனஸ் மகாத்மா காந்தி சேவை மையம் வலிறுத்தல்
-
ஆசிய பாரா விளையாட்டு சாதித்த தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு முதல்வர் விஜய் பாராட்டு
-
சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு
-
குப்பைகளை பிரித்து வாங்க வேண்டும் துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை
-
முதல்வர் விஜய் குறித்து அவதூறு; திமுக கவுன்சிலருக்கு போலீஸ் சம்மன்
-
ஓடிடி தளங்களை முறைப்படுத்த வேண்டியது அவசியம்; மோகன் பாகவத் வலியுறுத்தல்