முதல்வர் விஜய் குறித்து அவதூறு; திமுக கவுன்சிலருக்கு போலீஸ் சம்மன்
நமது நிருபர்
சென்னையில் திமுக எம்பி கனிமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் முதல்வர் விஜயை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார். கனிமொழி அமைதியாக அமர்ந்து இருப்பதும், பிரியா சிரித்தவாறு கேட்டு கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
தவெக அமைச்சர்கள், கட்சியினர் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர். தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார், சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.
வாசகர் கருத்து (2)
மாக்கான் - ,இந்தியா
20 அக்,2026 - 12:17 Report Abuse
இதே மாதிரி அன்றைக்கு “செய்யுங்கடா, செய்யுங்கடா..ன்னு தலைல தலைல அடிச்சுகிட்டேன்” எங்கே கேட்டானுங்க... இப்பப் பாரு...? இவனுங்க செஞ்ச மாதிரி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தப்ப... செத்துப்போனவன காரணம்காட்டி.... இதே மாதிரி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரையும், மாவட்டச் செயலாளரையும் தூக்கி போட்டிருந்தாலோ அல்லது வழக்கு பதிவு செஞ்சிருந்தா... இவனுங்க துண்டக்காணோம் துணியக் காணோம்னு எஸ்கேப் ஆகியிருப்பானுங்க... “படிங்கடா, படிங்கடா..ன்னு சொன்னா கேட்டாதானே”...ங்ற மாதிரி... இவனுங்க கேட்டாதானே...? மிதப்புலயே இருந்துட்டானுங்க... இவனுங்க ஜட்ஜ்மெண்ட் தப்பா போயிடுச்சு... இப்ப பாரு தொட்டதுக்கெல்லாம் ஜெயலலிதா மாதிரி தூக்கி உள்ளார வைக்குறானுங்க...? 0
0
Reply
ravindran - ,
20 அக்,2026 - 12:14 Report Abuse
பொம்பளையா 0
0
Reply
மேலும்
-
சென்னையில் 30 செ.மீ., தாண்டியும் மழை பெய்தால் என்ன செய்யமுடியும்; அமைச்சர் விக்னேஷ்
-
சிதிலமடைந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
-
க. புதுப்பட்டியில் ஊத்துக்காடு பாலம் சேதம்: பள்ளி வானங்கள் சிரமம்
-
கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்
-
கோர்ட்டில் ஆஜராகாத 3 பேர் மீது வழக்கு
-
சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement