கண்காணிப்பு அறை திறப்பு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை குடியிருப்பு நுழைவு வாயிலில் நவீன கண்காணிப்பு அறையை போலீஸ் எஸ்.பி., தேவநாதன் திறந்து வைத்தார்.

பதிவாளர் (பொறுப்பு) முத்தையா, சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரம்யா, ரோட்டரி கிளப் உதவி ஆளுநர் நெல்லை பாலு, ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், வழக்கறிஞர் செக்கலிங்கம் பங்கேற்றனர்.

ரூ. 4 லட்சம் செலவில் கட்டிய கண்காணிப்பு அறையில் 6 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. எஸ்.பி., தலைமையில் மாணவர்கள் சாலை போக்குவரத்து, போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement