கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே 48 கல்குவாரிகளா மறுபரிசீலனை செய்யப்படுமா
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 கி.மீ., சுற்றளவில் கல்குவாரிகள் அமைக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராதாபுரம் அருகே இருக்கன்துறையில் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராதாபுரம் தாலுகாவில் ஏற்கனவே 38 கல்குவாரிகள் செயல்படுவதாகவும், மேலும் 10 குவாரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனோதங்கராஜ் பேசுகையில், ‘‘அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பாறைகளை வெடிவைத்து உடைப்பதால் நில அமைப்பில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்துப்புவியியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு நடத்தி புதிய கல்குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’’ என்றார்.
மேலும்
-
கடலுார் சிக்னல் அருகே இருந்த தடுப்பு சுவர் அமைச்சர் உத்தரவால் இடித்து அகற்றம்
-
புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு
-
தச்சு தொழிலாளி சாவு
-
சத்திரம் விமான தளம் பணிகள் மீண்டும் துவங்க வாய்ப்பு: வனத்துறை நிலம் வழங்கியதால் தடை விலகியது
-
‘ஆண்டாளும் அவளது பாசுர மாலையும்’ மக்களை ‘கட்டிப்போட்ட’ நாட்டிய நாடகம்
-
சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு: விலையும் அதிகரிப்பு