ஸ்ரீமதி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஸ்ரீமதி கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் தனியார் கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில் 16 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் அடங்கிய 22 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி வேடசந்துார் ஜாகிர் கிரிக்கெட் அகாடமிக்கும் தமிழன் களம் அகாடமிக்கும் போட்டி நடந்தது.இதில் முதலில் ஆடிய ஜாகிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. பவுலர் அகில் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தமிழன் களம் அணி 10 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பவுலர் தேஜஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.தொடர்ந்து பண்ணை பள்ளி கிரிக்கெட் அகாடமி, எங் டைட்டன்ஸ் சி.சி., அணிகள் மோதின. இதில் பண்ணை பள்ளி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 109 ரன்கள் எடுத்தது. சபரி 29 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய எங் டைட்டன்ஸ் அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பவுலர்கள் மாதேஷ் கண்ணன் 4, பிரஜன் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.தொடர்ந்து நடந்த போட்டிகளில், ஒட்டன்சத்திரம் பட்ஸ் சி.சி. 9.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழந்து 25 ரன்கள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய பிரசித்தி வித்யோதயா ‛ஏ’ அணி விக்கெட் இழப்பின்றி 2.3 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் ஆரஞ்ச் கிரிக்கெட் அகாடமி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்தது. பவுலர் முகேஸ்வரன் 4 விக்கெட் எடுத்தார். அடுத்து ஆடிய ஆல் ரவுண்டர்ஸ் ஜூனியர்ஸ் சி.சி., அணி 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணி சார்பில் பிரவீன் குமார் 30 ரன்கள் எடுத்தார்.பிரசித்தி வித்யோதயா ‛பி’ அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் எடுத்தது. எதிர்த்து விளையாடிய வத்தலகுண்டு ஆரஞ்ச் கிரிக்கெட் அகாடமி அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 63 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரித்தின் 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
பழநி யுவராஜ் ஜூனியர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தனர். சச்சின் 30, புகழ் 25 ரன்கள் அடித்திருந்தினர். போஸ்கோ 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அடுத்து ஆடிய திண்டுக்கல் அனுக்கிரஹா பள்ளி அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பவுலர் சிவகார்த்திகேயன் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
மேலும்
-
12வது மாடி ஜன்னலில் இருந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை
-
மதுரை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
-
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
-
இபிஎஸ் ஏணிகளை எட்டி உதைத்துப் பழக்கப்பட்டவராச்சே.. : அந்துமணி பதில்கள்
-
காத்திருப்போர் பட்டியலில் ஐ.பி.எஸ்., ராதிகா
-
இந்தியாவுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டு; ஐ.நா.,வுக்கு அவர்கள் மன்றத்திலேயே பதிலடி