பல்கலை உயர் பதவிகள் தேர்வுவிரைவுபடுத்துவாரா கன்வீனர்: பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள உயர் பதவிகள் தேர்வு முறையை கன்வீனர் விரைவுபடுத்த வேண்டும் என பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பல்கலை பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குநர், கூடுதல் தேர்வாணையர் ஆகிய பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இப்பதவிகளில் பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இப்பதவிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதில் 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பங்களை பரிசீலிக்க சென்னை பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் உட்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் கூறுகையில் ‘ஜூலையில் விண்ணப்பம் பெறும் பணி முடிந்தது. அவற்றின் மீதான பரிசீலனை உடனடியாக துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்வுக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் பரிசீலனை தாமதமாகிறது. தகுதியான விண்ணப்பங்களை இறுதி செய்தால் தான் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்க முடியும். தேர்வுக் குழுவின் பணியை பல்கலை கன்வீனரான கல்லுாரிக் கல்வி கமிஷனர் பொன்னையன் விரைவுபடுத்த வேண்டும்’ என்றனர்.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை