இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை

ரோம்:
அதிக செலவு, சமநிலையற்ற பொருளாதாரம் காரணமாக பிரான்சில் போராட்டம் நடக்கிறது. இது இத்தாலிக்கும் பரவியது. அதில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள்,கற்கள் வீசப்பட்டதால், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இத்தாலியில் சில நகரங்களில், போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடக்கின்றன. இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடங்களுக்கும், கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். போராட்டம் குறித்த அறிய உள்ளூர் நாளிதழ்களை கவனிக்க வேண்டும்


அவசர காலங்களில்

ரோமில் உள்ள இந்திய தூதரகத்தை +39 331 614 2085

மிலனில் உள்ள தூதரக அலுவலகத்தை +39 3881647527 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எனத் தெரிவித்துள்ளது.

Advertisement