தொடரும் சைபர் தாக்குதல்களால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்: பன்னாட்டு நிதியம் எச்சரிக்கை
புதுடில்லி: வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பன்னாட்டு நிதியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வங்கி மற்றும் நிதி சேவைகள் அதிகளவில் இணையதளங்களை சார்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனால், வங்கிகள் மட்டுமின்றி அவற்றுடன் இணைந்த பணப்பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சைபர் தாக்குதல்களை மேலும் நுட்பமாக நடத்த பயன்படுத்தப்படலாம். அதேநேரம், தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
பல வங்கிகள் ஒரே தொழில்நுட்ப சேவை நிறுவனங்களை சார்ந்திருப்பதும் அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய நிறுவனங்களில் பாதிப்பு ஏற்பட்டால், பல வங்கிகளின் சேவைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப் படலாம். எனவே, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தி, தாக்குதல் ஏற்பட்டாலும் முக்கிய நிதி சேவைகள் தொடர்ந்து செயல்படும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
Barakat Ali - Medan,இந்தியா
20 அக்,2026 - 08:55 Report Abuse
பல அரசு அலுவலகங்களில் இன்னமும் விண்டோஸ் எக்ஸ் பி தான் பயன்படுத்துகிறார்கள் .... 0
0
Reply
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்
Advertisement
Advertisement