சிதிலமடைந்த ஐயனார் கோவில் புனரமைக்க கோரிக்கை
பெண்ணாடம்: அய்யனார் கோவிலை புனரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயனார் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் ஊரணி பொங்கல் மற்றும் சிறப்பு திருவிழாக்கள் விசேஷமாக நடப்பது வழக்கம். தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. ஓ.கீரனுார், பூவனுார், கோனுார், தாழநல்லுார் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வெளி மாவட்ட பக்தர்களின் குல தெய்வமாக உள்ளதால் இங்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் சுவர்கள், கோபுரங்கள் சிதிலமடைந்து செடி, கொடிகள் மண்டி உள்ளது. மேலும், பக்கவாட்டு சுவர்களில் உள்ள கற்கள் சரிந்து, விழுந்து வருகின்றன. இதனால், பூசாரி மற்றும் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று பூஜை செய்யவும், தரிசனம் செய்யவும் அச்சமடைகின்றனர்.
எனவே, சிதிலமடைந்துள்ள ஓ.கீரனுார் ஐயனார் கோவிலை புனரமைக்க மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்