கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப்பகுதி கோயில்களில் விஜயதசமி முன்னிட்டு வித்யாரம்பம் நடந்தது.

ராஜபாளையம் சுற்று பகுதி பல்வேறு கோயில்களில் நவராத்திரி கடந்த 10 நாட்களாக கொண்டாடப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு புதிதாக கல்வி தொடங்க உள்ள குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் சென்று வித்யாரம்பம் எனும் ஏடு துவங்கும் நிகழ்ச்சியில் பெற்றோருடன் கலந்து கொண்டனர். ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயிலில் தலைமை அர்ச்சகர் முன்னிலையில் வேத மந்திரங்கள் பாடி வழிபட்டு அர்ச்சகர்கள் வாயிலாக நாவில் தேன் தடவி உச்சரித்து தாங்கள் கொண்டு வந்த பச்சரிசி தட்டில் 'ஓம்' அ' என எழுதி கல்வியை துவக்கினர்.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கள் கல்வியை தொடங்க குருவிடம் ஆசி பெற்றனர்.

இதேபோல் சொக்கர் கோயில், தெற்கு வெங்காநல்லுார் சாரதாம்பாள் கோயில் என பல்வேறு இடங்களில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்கினர்.

Advertisement