ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வளாகத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நவராத்திரி விழா நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அக்., 11 அன்று காப்பு கட்டுடன் நவராத்திரி விழா துவங்கியது. தினமும் மாலை 6:00 மணிக்கு கொலு மண்டபத்தில் அம்மன் ராஜாங்கம், கன்யாகுமரி, சிவபூஜை, அன்னபூரணி, மீனாட்சி, கருமாரி, லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தினமும் சிறப்பு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.
பூஜைகளை கோயில் குருக்கள் ராமசுப்பிரமணியராஜா செய்திருந்தார். மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு முன்னிலை வகித்தார். தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கண்காணிப்பாளர்கள் சேவற்கொடியோன், சண்முகராஜா, மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், ஆசிரியர்கள் ராமசாமி, தங்காளீஸ்வரன், பழனிவேல் முருகன், நுாலகர் பாலாஜி, தமிழாசிரியர் நடனசுந்தரம் ஆகியோர் நவராத்திரிவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ////
மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்