புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி ஆணையராக அருண் அய்யாவு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி போக்குவரத்து துணை ஆணையர் விநாயராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் பொறுப்பினை கூடுதல் அடிப்படையில் கவனித்து வந்தார்.

அவர், தற்போது உழவர்கரை நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து துணைப் போக்குவரத்து ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், உழவர்கரை நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த அருண் அய்யாவு புதுச்சேரி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.

Advertisement