குளத்தில் கால் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, கோவில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழந்த சாம்பசிவம், 53, என்பவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சாம்பசிவம். இவர், தன் மகளுடன், நேற்று மாலை, மாதர்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள குளத்தில் கால்களை கழுவ இறங்கியபோது, கால் வழுக்கி குளத்திற்குள் தவறி விழுந்தார். சேற்றில் சிக்கிய அவர், மீள முடியாமல் குளத்தில் மூழ்கினார்.
தகவல் அறிந்து சென்ற தேர்வாய்கண்டிகை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பசிவம் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement