77 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்
சென்னை : ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுதும் இயக்கப்படும், 13,000 பயணியர் ரயில்களில், தினமும் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காஷ்மீர், அசாம், திரிபுராவில் இருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களின் பயண நேரம், 64 முதல் 74 மணி நேரம் ஆக உள்ளது. அனைத்து ரயில்களும் சரியான நேரத்தில் இயக்குவதற்கான, அனைத்து மேம்பாட்டு பணிகளும் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதில் சில நடைமுறை சிக்கல் இருந்து வருகின்றன. சில நேரங்களில் பழுது, சிக்னல் கோளாறு, இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டு வருகின்றன.
ரயில் பயணத்தில் தாமதம் ஏற்படுவது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், 69.2 சதவீத ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. இது, 2023 - 24ம் ஆண்டில் 73.62 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில், 77.11 சதவீதமாகி உள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்க, ரயில்வே பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அருணாச்சலில் சீனாவுடன் தொடரும் மோதல்; இந்தோ திபெத் எல்லைப்படை தகவல்
-
பிரிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும்; பிரதமர் மோடி அழைப்பு
-
எஸ்ஐஆர் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்; ஆளும் தவெக கூட்டணி வெளிநடப்பு
-
பேரழிவுக்கு வழிவகுக்கும்; ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் பியூஷ் கோயல்
-
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்; 4வது குறுகிய கால டெண்டர் வெளியீடு
-
விமர்சனத்துக்கு பதில் சொல்ல தயார்; ஆபாசமாக பேசினால் நிச்சயம் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை