தங்கச்சிமடத்தில் வனத்துறை வளர் மையம் திறப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் வனத்துறையின் பெருஞ் சிலந்திகளுக்கான புத்தாக்க வளர் மையம் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் காடுகளில் பெருஞ்சிலந்தி மற்றும் நீர்நிலைகளில் பெரிய உள்ளான் பறவைகள் வசிக்கிறது. இவைகளின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்படுத்திட புத்தாக்க வளர் மையம் கட்டடம் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் ராஜுவ் திறந்து வைத்தார். விழாவுக்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். பின் வளர் மையத்தின் செயல்பாடுகள், நோக்கங்கள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் மகேந்திரன் விளக்கி பேசினார். இதில் மேகமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஆனந்த், ராமநாதபுரம் கூடுதல் திவ்யான் ஷு நிகாம், உதவி வனபாதுகாவலர் கோபிநாத், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், வனவர் அப்துல் ரஹீம், வளர் மைய உயிரியலாளர் சஞ்சு, அபிஷேக் பங்கேற்றனர்.

Advertisement