நதியை தனியாக சுத்தம் செய்த ம.பி. இளைஞர்: குப்பைத்தொட்டியை திருடுவதாக குமுறல்
நதியை சுத்தம் செய்யும் போது கரையில் குப்பைகள் கொட்டுவதற்காக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி திருடு போனதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு டபாகி வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தனியாளாக நீர்நிலைகளை சுத்தம் செய்து வருபவர் 21 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் பிட்டு டபாகி என்ற பெயருடன் வலம்வரும் இவர், ஜன.26ம் தேதி ம.பி.யில் உள்ள அஜ்னார் நதியை சுத்தம் பணியை தொடங்கினார்.
8 மாதங்கள் தனியாளாக போராடி நதியை சுத்தம் செய்து முடித்தார். தனது முயற்சியை காணொளிகள் வழியாக சமூக வலை தளத்தில் பிட்டு டபாகி வெளியிட்டார். அவரின் இந்த செயல், பெரும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. பிரபல தொழிலபதிர் ஆனந்த் மகேந்திரா, இங்கிலாந்து மாஜி கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் என பலரும் பிட்டு டபாகிக்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினர்.
தற்போது அவரின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் கேள்வி எழுப்பும் வண்ணம் அஜ்னார் நதி மீண்டும் மாசடைய தொடங்கியது. நதியில் கழிவுகளும், குப்பைகளும் தேங்க ஆரம்பித்து இருக்கின்றன.
இதைக்கண்ட பிட்டு டபாகி, குப்பைகளை போடுவதற்காக நதியின் கரையில் 2 பெரிய குப்பை தொட்டிகளை வைத்திருந்து இருக்கிறார். அவற்றில் ஒன்றை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதையறிந்த பிட்டு டபாகி கடும் அதிருப்தி அடைந்து, அதையும் ஒரு வீடியோவாக ரிலீஸ் செய்து தனது மனக்குமுறலை வெளியிட்டு இருக்கிறார். அவரின் வேதனையை அறிந்த மீம்ஸ்வாசிகள், உங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு வருத்தத்தை பதிவு செய்கிறோம், கவலைப்படாமல் முயற்சியை தொடருங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
மேலும்
-
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு முதல் மக்களின் பாதுகாப்பு வரை…; போலீசாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
2029க்குள் பஞ்சாப்பில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்; அமித் ஷா சூளுரை
-
அடுத்த 3 ஆண்டில் இந்தியாவுடன் ரூ.48 லட்சம் கோடி வர்த்தக இலக்கு; அமெரிக்கா
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்