சட்டம் ஒழுங்கு பராமரிப்பு முதல் மக்களின் பாதுகாப்பு வரை…; போலீசாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

2

புதுடில்லி: தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி, போலீசாரின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

அவரது பதிவு: போலீஸ் நினைவு தினம் என்பது, மிகவும் சவாலான சூழல்களிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு நன்றியைத் தெரிவிக்கும் ஒரு தருணமாகும்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது முதல் குற்றச் செயல்களைத் தடுப்பது, அவசர காலங்களில் விரைந்து செயல்படுவது மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது.

கடமையாற்றும் போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த வீரமிக்க போலீசாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement