அடுத்த 3 ஆண்டில் இந்தியாவுடன் ரூ.48 லட்சம் கோடி வர்த்தக இலக்கு; அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று மும்பையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பேசினார்.
அவர் கூறியதாவது; இந்தியா, அமெரிக்காவின் பொருளாதார, ராஜதந்திர உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. 'எதிர்காலத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். முடிவுகளைக் கொண்டு வாருங்கள்,' என்று சொல்லித்தான் அதிபர் டிரம்ப் என்னை இந்தியாவுக்கு அனுப்பினார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருக்கும் ரூ.23.5 லட்சம் வர்த்தகத்தை, அடுத்த 3 ஆண்டில் ரூ.48 லட்சம் கோடியாக அதிகரிக்கச் செய்வது தான் இலக்கு. செமி கண்டக்டர், கனிமவளங்கள், எரிசக்தி, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளோம்.
இந்தியா - அமெரிக்கா ராஜதந்திர கூட்டணி மிகவும் அசாதாரணமானது. இருநாடுகளின் உறவில் ஏற்றம், இறக்கங்கள் உள்ளன. 21ம் நூற்றாண்டின் போக்கை மாற்றியமைக்கும் திறன் இரு நாடுகளுக்கும் உண்டு. இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது