கடலுார் சிக்னல் அருகே இருந்த தடுப்பு சுவர் அமைச்சர் உத்தரவால் இடித்து அகற்றம்
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் சாலை போக்குவரத்தை தடுத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் சுவர் அமைச்சர் உத்தரவால் இன்று இடித்து அகற்றப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலத்திற்கு இணையாக கெடிலம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் இருந்து போக்குவரத்தை இருவழிப்பாதையாக மாற்றும்போது, ஜவான்ஸ்பவன் சாலையில் இருந்து வரும் போக்குவரத்தை நகாய் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கான்கிரீட் சுவர் வைத்தனர். இதனால் ஜவான்ஸ்பவன் சாலையில் வரும் வாகனங்கள் நேரடியாக முதுநகர் செல்ல முடியாத நிலையால் வாகனங்கள் இடதுபுறமாக புதிய பாலத்தில் திரும்பி போஸ்ட் ஆபீஸ் வரை வந்து மீண்டும் ‘யு டர்ன்’ போட்டு திரும்ப வேண்டும்.
இதற்கு போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தும் நகாய் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடலுார் நகரில் புதுச்சேரியை போன்று எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அமைச்சர் ராஜ்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதையொட்டி இன்று அவர் நகாய் அதிகாரிகளிடம் பேசி தடுப்பு சுவரை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது கான்கிரீட் சுவர் ஊழியர்களால் இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வழியாக போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
-
மொபைல் போன் திருடிய சிறுவர்கள் கைது
-
கடலுாரி ஜி.ஆர்.கே., குழுமத்தின் பிரபா டெக்ஸ் கோலாகல திறப்பு விழா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்
-
வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
-
தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி
-
வங்கி ரகசிய எண்களை யாருக்கும் பகிர வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘அட்வைஸ்’