ஹிந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி ஆயுத பூஜை விழா

திருப்பூர்: ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆயுத பூஜையை திருப்பூரில் கொண்டாடினர்.

ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சார்பில், ஆயுத பூஜை, விஜயதசமி விழா திருப்பூர் மாநகர் முழுதும் ஆட்டோ ஸ்டாண்டுகளில் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் ஆட்டோ ஊர்வலமும், மதியம் எம்.எஸ்., நகரில் ராமகோபாலன், நுாறாவது பிறந்த நாளையொட்டி, நுாறு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்று வழங்கினார். மாநில பொது செயலாளர்கள் கிஷோர்குமார், செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement