உபியில் 125 தொகுதிகளில் களமிறங்க காங்., முடிவு: தொகுதி பங்கீட்டை கவனிக்கிறார் பிரியங்கா
லக்னோ : உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உடன் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்துள்ள காங்கிரஸ், மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், 125ஐ கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளது.
உ.பி.,யில் மொத்தமுள்ள, 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, ஆட்சியைக் கைப்பற்றி விட்டால், மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்பது, எழுதப்படாத விதி.
தொடர்ந்து இரு முறை ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ., மூன்றாவது வெற்றியை ருசிக்க தற்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. உ.பி.,யில் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்ளது. 2022 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி, 100 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த முறை காங்கிரசுடன் கூட்டணி வைத்து அக்கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது.
சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., 125 தொகுதிகளை கேட்டு பெற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, மாநில காங்., மூத்த தலைவர்களுடன், ராகுலின் சகோதரி பிரியங்கா, சமீபத்தில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், 175 தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு, பிரியங்கா தலைமை தாங்குவார் என்றும் காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
நவம்பருக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் நோக்கில், உத்தேச தொகுதி பட்டியலை காங்., தயாரித்துள்ளது. இந்த வாரம், உ.பி., - காங்., தலைவர்களுடன் பிரியங்கா மீண்டும் ஆலோசனை நடத்திய பின், 125 - 150 தொகுதிகள் அடங்கிய இறுதி பட்டியல் சமாஜ்வாதியிடம் சமர்ப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி உடன் கூட்டணி வைத்து களமிறங்கிய காங்., போட்டியிட்ட 17 இடங்களில், 6ஐ கைப்பற்றியது. இந்த தேர்தலில், உ.பி.,-யில் உள்ள, 38 சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தையும், 42 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் காங்., பிடித்தது. இந்த 80 தொகுதிகளையும் கேட்டுப் பெறுவதில் அக்கட்சி தீவிரமாக இருக்கிறது. அதே போல், மாநிலத்தின் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சட்டசபை தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்பதும் காங்கிரசின் திட்டம். தற்போது, சமாஜ்வாதி வசமுள்ள அமேதி, ரேபரேலி, சஹாரன்பூர் ஆகிய தொகுதிகளையும் கேட்டு பெற காங்., முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில் மொத்தமுள்ள, 403 சட்டசபை தொகுதிகளில், 350ல் தனித்து போட்டியிட இலக்கு வைத்துள்ள அகிலேஷ் யாதவ், ஏற்கனவே பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்யத் தொடங்கி விட்டார். இந்த முறை ஆட்சி அதிகாரத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ள அவர், காங்கிரசுக்கு, 60 - 65 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்., அடம்பிடிக்கும் பட்சத்தில் கூட்டணியில் இருந்து அக்கட்சியை கழற்றி விடவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
125 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்கவேண்டும்.மேலும்
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்
-
'காலைக்கதிர்' அரிச்சுவடி ஆரம்பம் கோலாகலம் 'அ, ஆ' எழுதிய மழலையரால் பெற்றோர் நெகிழ்ச்சி
-
உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
-
பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது; அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்