பிரிட்டன் அரச குடும்பத்துடனான பிரச்னையை சரி செய்ய விரும்பும் இளவரசர் ஹாரி
லண்டன்:
பிரிட்டன் இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை 2018ல் திருமணம் செய்து கொண்டார். வெள்ளையர் அல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், மேகனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தந்தை மன்னர் சார்லசுடனும், சகோதர் இளவரசர் வில்லியம்ஸ் உடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், அரச குடும்பத்தில் இருந்து இருவரும் விலகினார்.
சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தனர். சில மாதங்களுக்கு முன்பு தான் பிரிட்டன் திரும்பினர்.
இந்நிலையில், ஹாரி அளித்த பேட்டியில் கூறியதாவது: எனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை மக்களிடம் கவனத்தை பெற்றது. சகோதரர் மற்றும் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவர்களின் குடும்பத்திலும் பிரதிபலித்ததே இதற்கு காரணம். சிலர் இந்த உறவு சரியாக அமையக்கூடாது என விரும்புகிறார்கள். நான் அது சரியாக அமைய வேண்டும் என விரும்புகிறேன்.
உறவுகளை சரி செய்வது என்பது கடந்த கால காயங்களை அழிப்பது என்று அர்த்தம் அல்ல. என்னை பொறுத்தவரை , உலகில் இந்த நாடகம் போதும். மக்களின் வாழ்க்கையில் பிரச்னை உள்ளது. அவர்கள் அதனுடன் தொடர்கின்றனர். இவ்வாறு இளவரசர் ஹாரி கூறினார்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது