'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரம்; ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பாஜ தேசிய தலைவர் பாராட்டு

புதுடில்லி: 100வது நிறுவன தினத்தை ஒட்டி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது: 'தேசமே முதன்மை' என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, சமூகத்தை ஒருங்கிணைக்கவும், நம் நாட்டை அதன் உன்னத நிலைக்கு வழிநடத்தவும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் இந்த மகத்தான சேவை, எதிர்கால தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

சமூக அமைப்பை வளர்ப்பதிலும், 'தேசம் முதலில்' என்ற குறிக்கோளை ஊக்குவிப்பதிலும் அவர்களின் பங்கு முக்கியமானது. சேவை மனப்பான்மைக்கு பாராட்டுக்கள்; தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நிதின் நபின் கூறியுள்ளார்.

Advertisement