நலத்திட்ட உதவி தொகை வழங்கல்

திருப்பூர்: திருப்பூர் மக்கள் அமைப்பினர், 35 பார்வையற்றோர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர்.

திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில், கோடை காலங்களில் நீர் மோர் வழங்குதல், கல்வி உதவி தொகை, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் என, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மக்கள் அமைப்பு துவக்கத்தையொட்டி, பார்வையற்றோர், 35 பேருக்கு தலா, ஐந்து கிலோ அரிசி நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தண்டுக்கான பணிகளை இந்த அமைப்பினர் திட்டமிட்டு கல்வி உதவிதொகை போன்ற பல்வேறு சமூக பணிகளை செய்ய உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement