வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது

-நமது நிருபர்-




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் பல்வேறு இடங்களில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் சோதனை நடத்தினர்.

சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு காரைக்காலில் இருந்து வந்த அரசு பஸ்ஸில் வெளிமாநில மது பாட்டில் கடத்தி வந்த சகோதரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கவிதா, 30, சுகன்யா,32, வேம்பு,25, என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் காரைக்காலில் இருந்து குறைந்த விலை மது பாட்டில்களை கடத்தி வந்து சீர்காழி பகுதியில் விற்பனை செய்துள்ளனர்.

மூவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement