கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்

புதுடில்லி: தடையை மீறி டில்லி ஜந்தர் மந்தரில் நுழைந்ததாக கரப்பான் கும்பலைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அஷூதோஷ் ரன்கா கைது செய்யப்பட்டனர். சிறப்பு நிர்வாக நீதிபதி உத்தரவில், இவர்கள் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்ற காவலை எதிர்த்து கரப்பான் கும்பல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தை ஜனநாயக முறையில் மக்கள் தான் தேர்வு செய்ய முடியும் என்று கூறி, கரப்பான் கும்பலின் போராட்டத்திற்கு எதிர்ப்பையும் பதிவு செய்தார்.

நீதிமன்ற காவலுக்குப் பிறகு, அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சில மணிநேரங்களில் இந்த இருவருடன் சேர்த்து, அந்த கும்பலைச் சேர்ந்த அஜின்கியா ஷிண்டோவுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ரஜோரி கார்டனில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement