முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
- நமது நிருபர் -
மத்திய இணை அமைச்சர், ராஜ்யசபா எம்பி பதவிகளில் இருந்து எல்.முருகன் திடீரென ராஜினாமா செய்தார். இவரை ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். ராஜ்யசபா எம்பி பதவி காலியானது. இன்று (அக்டோபர் 22) எல். முருகன் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 26ம் தேதி துவங்குகிறது; வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ம் தேதி, வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5ம் தேதி. நவம்பர் 12ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஓட்டுப்பதிவு நடைபெறும் அதே நாளிலேயே ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும். நவம்பர் 16ம் தேதிக்குள் தேர்தல் பணிகள் அனைத்து முடிக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
சிறப்பு வீடியோ!
முருகன் ராஜினாமா செய்த எம்பி பதவிக்கு இடைத்தேர்தல்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்