இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
சென்னை: இன்ஸ்டாகிராமில் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற சேனலை நடத்தி வந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 13 லட்சம் பாலோயர்களைக் கொண்டிருந்த இவர், நிதி தொடர்பான அறிவுரைகளையும், யோசனைகளையும் வழங்கி வந்தார்.
ஹரிஷ் தற்கொலை குறித்து தந்தை விநாயகம் கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில், ஹரிஷ் குறித்து சக யூடியூபர் ஜேசன் சாமுவேல் அவதூறு பரப்பியதாகவும், ஹரிஷிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஜேசன் சாமுவேல், செபியின் உரிய உரிமம் பெற்று நிதி தொடர்பான ஆலோசனை வழங்க ஹரிஷிடம் அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். தற்போது, ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஷ் தற்கொலை தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவங்களை இவ்வளவு வளர விட்டது இளைய தலைமுறையின் பொறுப்பற்ற அறிவற்ற பேக்குத்தனத்தின் உச்சம். சமூக வலைதளத்தில் இந்த சகிக்கமுடியாத மூஞ்சிக்காரங்க இளைய தலைமுறையினருக்கு ஆசை காட்டுவது ஒருபுறம், இன்னொரு புறம் இந்த வலை தளங்கள் செய்யும் அயோக்கியத்தனம். இந்த இளையதலைமுறையினர் சற்று தங்களது வேலை டென்ஷன் குறைவதற்காக இன்ஸ்டாவிலோ பேஸ்புக்கிலோ வேகமாக ஸ்லைட் செய்து போவதைக்கூட ஒரு பார்வையாக கணக்கிட்டு இந்த வலைதளங்கள் சிலருக்கு அதிக பார்வையாளர்களாக கணக்கெடுத்து கொண்டாடி பணம் தரும் போது அந்த யூடியூபர்/இனஸ்டா பதிவாளருக்கு தலைக்கு மேல் கொம்பு முளைத்துவிடும். இதன் தொடர்ச்சியாக அந்த நபர் என்ன டுபாக்கூர் பதிவே போட்டாலும் அது இளைய பார்வையாளர்களை அடையும் படி அந்த செயலியில் வலைதளக்காரர்கள் அமைத்துவிடுவதால், இந்த வீபரீதம் நிகழ்கிறது. உண்மையில் தகுதியே இல்லாத ஆனால் தொடர்ச்சியாக வலைதளங்களில் பதிவிடுபவர்கள், தகுதிகள் உள்ளவர்களாக பிரபலப் படுத்தப் படுகிறார்கள். இந்த வலைதளக்காரர்கள் எல்லா பதிவுகளும் எல்லாருக்கும் எப்பொழுதும் தெரிகீற மாதிரி அமைத்துள்ளனர். தனித்தனி சப்ஜெக்ட் ஆக தேடிப் பார்க்கிற மாதிரி வைத்தால் இந்த பிரபலங்கள் சிங்கி தான் அடிக்கணும். நாசகார அமெரிக்க ஆப்பிள் மைக்ரோசாப்ட், ஜூகர்பெர்க்,எலான் மஸ்க் போன்ற முதலாளித்துவ விஷக்காளான்களை நாம் தள்ளிவைக்க
கற்றுக் கொள்ள வேண்டும். நம் இந்தியாவின் பயனாளர்கள் கெத்துடன் இருந்தால் தான் இந்த தற்கொலைகள் குறையும். இந்தியர்கள் எல்லாரும் ஒரு பத்து நாட்கள் சமூக வலைதளங்களை புறக்கணித்தால் அவர்கள் மண்டி இடுவார்கள் என்பது நிச்சயம்.
டாஸ்மாக் தகராறை விட கேவலமாக இருக்கு இந்த சோஷியல் மீடியா தகராறு..
செபி இடம் ஆலோசனை கேட்டா கந்து வட்டிக்காரன் மீட்டர் வட்டிக்காரன் ராக்கெட் வட்டி காரன் எல்லாம் வட்டிக்கு விடறானுவோ .. அவங்க கிட்டேயும் மக்கள் வட்டிக்கு வாங்குறங்க தானே....இதுல வேற ஏதோ வீரமணி விஷயம் இருக்கும் போல தெரியுது
தொழில் பொறாமையின் உச்சம் இந்த ஜேசன் சாமுவேல் பண்ண செயல். ஏண்டா ஒருத்தன் திறமையில் வளர்ந்தா அவனை விட முயற்சி செஞ்சு நீயும் பெரியாளாக மாறு. அதைவிட்டுட்டு திமுக காரன் மாதிரியே நோண்டிக்கிட்டு, காசு புடுங்க மிரட்டிக்கிட்டு இருந்தா இப்படி அழிஞ்சு தான் போவ.