நான்கு வழி சாலை விரிவாக்கம் மரங்கள் வெட்டும் பணி தீவிரம்

பெண்ணாடம்: ரூ. 150 கேடியில் நடந்து வரும் விருத்தாசலம் – ராமநத்தம் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்கு சாலையோர மரங்கள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விருத்தாசலம் – ராமநத்தம் நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியே திருச்சி, கடலுார், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இச்சாலையில் குறுகிய பாலங்கள், வளைவு சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் – ராமநத்தம் வரையிலான குறுகிய சாலை மத்திய சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 49 கோடியில், கூடுதலாக 7 மீ., அகலம் விரிவுபடுத்தப்பட்டது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

விபத்துகள் மற்றும் போ க்குவரத்து பாதிப்புகளை தடுக்க, விருத்தாசலம் – ராமநத்தம் சாலையை, நான்கு வழி சாலை யாக தரம் உயர்த்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, கடந்தாண்டு நவம்பரில் விருத்தாசலம் – ராமநத்தம் சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்படும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்காக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 150 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதில், முதற்கட்டமாக கடந்தாண்டு துவங்கப்பட்ட திட்டக்குடி – அரங்கூர் வரையிலான, ரூ. 70 கோடியில் 10 கி.மீ.,

துார சாலைப்பணி விரைவில் முடிய உள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ. 80 கோடியில் கருவேப்பிலங்குறிச்சி – திட்டக்குடி வரையிலான சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக சாலையோரங்களில் வடிகால் வசதிக்கு பள்ளம் தோண்டும் பணிகள் முடிய உள்ளன. இந்நிலையில், நந்தப்பாடியில் இருந்து பெண்ணாடம் வரையிலான சாலையோர புளியமரங்கள் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement