கட்டட விபரங்கள் வெளியிடுவதில் தாமதம் சி.எம்.டி.ஏ.,வால் வீடு வாங்குவோர் குழப்பம்
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் கட்டட அனுமதி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படாததால், வீடு வாங்குவோர் குழப்பமடைந்துள்ளனர்.
சென்னை பெருநகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொள்கிறது.
முன்பு, அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான அனுமதி கோப்புகள் அரசுக்கு அனுப்பப்பட்டு, அரசாணை பெறுவது வழக்கமாக இருந்தது.
தற்போது, இந்த அதிகாரம் சி.எம்.டி.ஏ.,வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாகக் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் விபரங்கள் சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், செப்., 29க்குப் பின் எந்தக் கட்டட அனுமதி விபரமும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், செப்., 30 முதல் எந்தெந்தக் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பொதுமக்களும், வீடு வாங்குவோரும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:
வீடு வாங்குவோர், நாங்கள் அளிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சி.எம்.டி.ஏ., மற்றும் ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளங்களில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஆனால், கடந்த 20 நாட்களாகக் கட்டட அனுமதி விபரங்கள் புதுப்பிக்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், இதுபோன்ற முக்கியத் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அனுமதி விபரங்களை உடனடியாகப் பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு முதல் மக்களின் பாதுகாப்பு வரை…; போலீசாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
2029க்குள் பஞ்சாப்பில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்; அமித் ஷா சூளுரை
-
அடுத்த 3 ஆண்டில் இந்தியாவுடன் ரூ.48 லட்சம் கோடி வர்த்தக இலக்கு; அமெரிக்கா
-
சாட்டையால் அடித்து 'பேய் விரட்டும்' விநோத நிகழ்வு
-
ஆசிய பாரா விளையாட்டு; இந்தியாவுக்கு குண்டு எறிதலில் தங்கம்... வில்வித்தையில் வெள்ளி
-
காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பு அரண்; சொல்கிறார் ஸ்டாலின்