வாலிபரை தாக்கி பணம் பறித்த ரவுடி உட்பட 4 பேர் கைது
பண்ருட்டி: வாலிபரை மிரட்டி தாக்கி பணம் பறித்த விவகாரத்தில், ரவுடி உள்ளிட்ட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் நவீன்குமார்,21; இதே பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் மகன் அர்ஜூன். நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு அர்ஜூன் நந்தகோபாலை மொபைல் போனில் அழைத்து, கீழக்குப்பம் ஏரிக்கரை அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு வர சொன்னார்.
இதன்பேரில் அங்கு சென்ற நவீன்குமாரை அங்கிருந்த கீழக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரவுடி ராஜசேகர்,27; அர்ஜூன், 21; கீழக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் ஆகாஷ்,18; மற்றும் கீழக்குப்பத்தை சேர்ந்த, 16 வயது சிறுவன் ஆகிய, 4 பேரும் சேர்ந்து மிரட்டி, அசிங்கமாக திட்டி தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த, 600 ரூபாயை பறித்துக்கொண்டு அனுப்பினர்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் நவீன்குமார், கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகர், அர்ஜூன், ஆகாஷ், மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4பேரை கைது செய்தனர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது