சிறுமி கர்ப்பமாக்கிய வாலிபர் மீது ‘போக்சோ’

சிதம்பரம்: புவனகிரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புவனகிரி, மஞ்சகுழி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ஆகாஷ்,20; இவர், பிளஸ் 1 பயிலும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார்.

இதற்கிடையே, கடந்த 8ம் தேதி வீட்டில் மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஆகாஷ் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement