சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி ஊஞ்சல் உற்சவம்
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடந்தது.
எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில், சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 52ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் கடந்த 11ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நவராத்திரியை முன்னிட்டு தினமும் ஹோமங்கள் நடத்தப்பட்டு, மாலை கலை நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று நவராத்திரி நிறைவு விழாயொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நவராத்திரி விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement