கண்காட்சி கார்னர். சாக் கண்ணாடி, கதவு, அலுமினியம் டெக் எக்ஸ்போ – 2026
கண்ணாடி உற்பத்தி, கதவு, ஜன்னல் தயாரிப்பு மற்றும் அலுமினியப் பொருட்கள் சார்ந்த மூன்று சர்வதேச தொழில் கண்காட்சிகள், டிசம்பர் 10 முதல் 12ம் தேதி வரை புதுடில்லியில் நடைபெற உள்ளன.
'ஜாக் கிளாஸ் டெக்னாலஜி எக்ஸ்போ', 'ஜாக் டோர்ஸ் அண்டு விண்டோஸ் எக்ஸ்போ', 'ஜாக் அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன்ஸ் எக்ஸ்போ' ஆகிய கண்காட்சிகளில் புதிய இயந்திரங்கள், உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஒரே பார்வையாளர் அனுமதிச் சீட்டில் மூன்று கண்காட்சிகளையும் மூன்று நாட்களிலும் பார்வையிடலாம்.
என்ன பார்க்கலாம்?
கண்ணாடி வெட்டுதல், பதப்படுத்துதல், மெருகூட்டும் இயந்திரங்கள்.
அலுமினியம், யு.பி.வி.சி., கதவு, ஜன்னல் தயாரிப்புகள்.
அலுமினிய வடிவமைப்பு, உற்பத்தித் தொழில்நுட்பங்கள்.
கட்டுமானத் துறைக்கான பொருத்துகள், உதிரிப்பாகங்கள்.
யாருக்கு பயன்படும்?
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள்.
கட்டுமான நிறுவனங்கள், கட்டட வடிவமைப்பாளர்கள்.
இயந்திர விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள்.
புதிய தொழில் தொடங்க விரும்புவோர்.
கண்காட்சி விபரம்
நாள்: டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை
இடம்: யஷோபூமி கண்காட்சி மையம், துவாரகா, புதுடில்லி.
நேரம்: காலை 10:00 – மாலை 6:30
நுழைவுக் கட்டணம்: டிசம்பர் 9 வரை இணையவழி முன்பதிவு இலவசம். டிசம்பர் 10 முதல் நாளொன்றுக்கு ரூ.200
முன்பதிவு: expo.zak.glass