காரைக்குடியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

காரைக்குடி: காரைக்குடி மகர்நோன்பு திடல் மற்றும் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், செக்காலை சிவன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், நவராத்திரி விழா நாட்களில் தினமும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்றுமுன்தினம் இரவு அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. அலங்காரத்தில் அம்மன் கோபுரம் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழையில் அம்பு குத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நான்கு திசைகளில் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடந்தது.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செஞ்சை கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில், காரைக்குடி சிவன் கோயில், கோவிலூர் கொற்றாலீஸ்வரர் கோயில்களில் தினமும் நவராத்திரி விழா நடந்தது. அம்பு போடும் நிகழ்ச்சியையொட்டி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சுவாமி மற்றும் அம்மன் கோயிலில் இருந்து கிளம்பி நகர்வலம் வந்தது. தொடர்ந்து மகர்நோன்பு திடலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement