பைக் ஷோரூம் உரிமையாளரை வெட்ட முயன்ற நபருக்கு வலை
பாகூர்: பாகூர், வேதபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் 30; அதே பகுதியில் பைக் ஷோரூம் வைத்துள்ளார். இவர், நேற்று இரவு வீட்டில் இருந்த போது, கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து, பிரபாகரன் கதவை திறந்து பார்த்தபோது, கதவில் கத்தியால் வெட்டப்பட்ட அடையாளம் இருந்தது.
வெளியே வந்து பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் கையில் கத்தியுடன் நின்ற படி, பிரபாகரனை ஆபாசமாக திட்டி, என்னை நீ தான் போலீசில் அடிக்கடி மாட்டி விடுகிறாயா? உன்னை தீர்த்து கட்டினால், எல்லாம் சரியாகி விடும் என கூறி கத்தியால் வெட்ட முயன்றார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்ததால், நரேஷ் தப்பிச் சென்றார். பிரபாகரன் புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து நரேஷை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement