அக்.,24ல் மாவட்ட கேரம் போட்டிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், தன்னார்வ அமைப்பு சார்பில் சின்னாபிள்ளை, ராஜாமணியம்மாள் நினைவு மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் சோபியா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் அக்.,24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.

12, 14, 18 வயதுக்கு உட்பட்ட இருபாலர் மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. முதல் 4 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியாளர்கள், ஸ்டைகர், மதிய உணவு, பள்ளி சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

அக்.,24 காலை 9:30 மணிக்கு மாணவர்களுக்கும், அக்.,25ல் மாணவிகளுக்கும் போட்டிகள் துவங்கும். பங்கேற்க விரும்புவர்கள் அக்.,23 இரவு 8:00 மணிக்குள் அணிகள், சுய விவரங்களை 97860 61985, 78457 89569 எண்களில் பதிவு செய்ய வேண்டும்.

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளின் இடையே மாவட்ட கேரம் நடுவர் தேர்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வக்குமார், நிர்வாகிகள் செய்கின்றனர்.

Advertisement