கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நல திட்ட பணிகளை கலெக்டர் ஷரண்யா அறி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் குடிநீர், சுகாதாரம், சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement