சமுதாயக்கூடம் அகற்றப்படுமா

சோழவந்தான்: 'தென்கரை ஊராட்சி மலைப்பட்டியில் பாழடைந்த சமுதாயக் கூட்டத்தை அகற்ற வேண்டும்' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

மேலக்கால் மெயின் ரோட்டோரம் மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. தற்போது வலிமையிழந்ததால் கட்டடத்தின் பல பகுதிகளில் விரிசல் விழுந்துள்ளது. காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

தெரு நாய்களின் வசிப்பிடமாகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனருகே சிறுவர்கள் நடமாட்டம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement