உளுந்துார்பேட்டையில் வரும் 27 ம் தேதி உயர்கல்வி படிப்புக்கு கல்வி கடன் முகாம்
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் வரும் 27 ம் தேதி உயர்கல்வி படிக்க செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பத்மஜா விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பள்ளி கல்வியை முடித்து உயர் கல்விக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெற்று பயன் பெறும் வகையில் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து மாபெரும் கல்வி கடன் முகாம் நடத்தப்படுகிறது.
உளுந்துார்பேட்டை ஜவகர்லால் நேரு பெண்கள் கல்லுாரி வளாக கூட்டரங்கில் வரும் 27 ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற வழிகாட்டும் வகையில் பி.எம் வித்யா லட்சுமி போர்டல் https://pmvidyalaxmi.co.in/ மூலமாக கல்வி கடன் பெற வழிகாட்டப்படும்.
மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்ப்பித்து தங்களுக்கான கல்வி கடனை பெற முடியும். உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கவும் கடன் வழங்கப்படும். மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விதமான மேற்படிப்புக்கும் கடன் பெறலாம்.
கல்வி கடனை மாணவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறலாம். மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள வங்கி கிளைக்கு ஆன்லைன் https://pmvidyalaxmi.co.in/ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர் மற்றும் அவர்களது பெற்றோரின் ஆதார், வருமான வரி அட்டையின் நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மாணவர் முதல் பட்டதாரி என்றால் முதல் பட்டதாரி சான்றிதழ், தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான சான்று(மெரிட் அட்மிஷன் – கவுன்சிலிங் சர்டிபிக்கட்) கல்லுாரியில் பயில்வதற்கான போனபைட் சான்றிதழ், கல்விக்கட்டண விவரங்கள்(அனைத்து ஆண்டிற்கும் முழு விவரங்களுடன்) உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
-
காங்கிரஸ் இல்லாமல் திமுக கரை சேர முடியாது; சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்
-
சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? திமுகவை விளாசிய அமைச்சர் அருண்ராஜ்
-
துபாயைவிட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மிகவும் குறைவு
-
திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
-
ராகுலுக்கு தேச விரோதிகளுடன் தொடர்பு; பாஜ எம்பி பகீர் குற்றச்சாட்டு
-
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்