இந்தியாவை குறிவைத்து செய்யவில்லை; விசா கட்டுப்பாடு குறித்து அமெரிக்க அமைச்சர் சப்பைக்கட்டு

11

-நமது நிருபர்-


அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் விசா பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. புதிய வதிகள் படி, ஏராளமான விசாக்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி:

டிரம்ப் நிர்வாகத்தின் எச்-1பி விசா கட்டுப்பாடுகள் இந்தியாவை இலக்காகக் கொண்டவை அல்ல. அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும் தேசிய நலன்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. இந்த மாற்றங்கள் அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களையும், அவர்களைப் பணியமர்த்த விரும்பும் அமெரிக்க வணிக நிறுவனங்களையும் பாதித்துள்ளன. இந்தியாவை மட்டும் குறிவைத்து செய்யவில்லை.

இவை உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். மோசடி, முறைகேடுகள் மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழப்பது போன்றவற்றை சரிசெய்ய அமெரிக்கா முயற்சிக்கிறது. வணிகம் சார்ந்த குடிவரவுத் திட்டங்கள் பல சமயங்களில் கட்டுக்கடங்காத மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளன; அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.

Advertisement