நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு; டிசம்பர் 11க்குள் வாக்குமூலம் அளிக்க டிரம்புக்கு கோர்ட் கெடு
- நமது நிருபர் -
அமெரிக்காவில் 2020ல் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வியடைந்தார். 2021 ஜன., 6ல் அவருடைய ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகத்தை முற்றுகையிட்டு, சூறையாடினர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம் ஒரு ஆவண படத்தை வெளியிட்டது. டிரம்பின் உரையை திருத்தி வெளியிடப்பட்டது. டிரம்பின் பேச்சே வன்முறையைத் துாண்டியதற்கு காரணம் என்பது போல் அது அமைந்திருந்தது.
பிபிசி நிறுவனம் தவறாக எடிட் செய்து ஆவணப்படம் வெளியிட்டதாக டிரம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக பிபிசி நிர்வாகம் மன்னிப்பு கேட்டபோதிலும், டிரம்ப் தரப்பு வழக்கை வாபஸ் பெறவில்லை. பிபிசி நிறுவனம் தரப்பில் டிரம்புக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனாலும் டிரம்ப் 95,070 கோடி ரூபாய் நஷ்வ ட ஈடு கேட்டு, அவதூறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 16ம் தேதியே டிரம்ப் ஆஜராக ஒப்புக்கொண்டிருந்தார்.
முக்கியமான தேசியக் கடமைகள் இருப்பதாகக் கூறி டிரம்ப் தரப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. டிரம்ப் திட்டமிட்டபடி ஆஜராகாமல் ஜார்ஜியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக பிபிசி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். வரும் டிசம்பர் 11ம் தேதிக்குள் டிரம்ப் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்; தவறினால் டிரம்ப் தொடர்ந்த இந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்
-
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, 32 பேர் காயம்
-
தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
-
திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 'லீவு'!
-
முதல்முறையாக மனிதனை தாக்கிய கால்நடை வைரஸ்; பிரான்சில் ஒருவர் பலி
-
வெளிநாட்டு தலைவருடன் சந்திப்பை விமர்சித்த ராகுல்; இந்திராவை உதாரணமாக காட்டி ஜெய்சங்கர் பதிலடி
-
மருத்துவத்துறை சார்பில் பொது மருத்துவ முகாம்