உலக சாதனையை முறியடித்தார் இந்தியாவின் சந்தீப்; தங்கம் வென்று தமிழக வீரர் நவீன் அசத்தல்

அய்ச்சி நகோயா: ஜப்பானின் அய்ச்சி நகோயா நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். வெறும் 52.28 விநாடிகளில் இலக்கை அடைத்துள்ளார். 2023ல் சவுதி அரேபியாவின் நூர் அல்சனா 52.81 விநாடிகளுக்குள் இலக்கை அடைந்ததே உலக சாதனையாக இருந்தது.

பாட்மிண்டன் போட்டியின் பைனலில் இந்திய வீரர்கள் நிதேஷ் குமார் - பிரமோத் பகத் எதிர்கொண்டு விளையாடினர். இறுதியில் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வென்று நிதேஷ் குமார் தங்கம் வென்றார். பிரமோத் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆண்கள் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஹர்வீந்தர் சிங், விஜய் சுண்டி தங்கம் வென்றனர். பைனலில் சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தினர். ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நவீன் சிவகுமார் தங்கம் வென்றார். இந்தோனேஷியாவின் ப்ரெடி செத்யாவனை 21-9, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இவர் ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பர்மோத், (4;09.65) 2வது இடத்தை பிடித்து வெள்ளி வென்றார். நீளம் தாண்டுதலில் நிமிஷா வெள்ளியும், 400 மீட்டர் ஆடவர் பிரிவில் அஜய் குமார் வெண்கலமும் வென்றனர்.

பாரா ஆசிய விளையாட்டின் 5ம் நாளில் இதுவரையில் இந்திய 3 தங்கத்தை வென்றுள்ளது. மொத்தம் 26 தங்கம், 33 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Advertisement