கார்கள் மோதி தொழிலாளி பலி

வேடசந்துார்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செட்டியமங்கலம் ராமசாமி மகன் ரங்கநாதன் 30. கரூர் மாவட்டத்தில் உள்ள காற்றாலையில் வேலை செய்து வந்தார். வேடசந்துார் அருகே ரங்கநாதபுரம் பங்க்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு டூவீலரில் திரும்ப சென்றார்.

கல்வார்பட்டி செக்போஸ்ட் அருகே கரூர் திண்டுக்கல் ரோட்டில் எதிர் திசையில் சென்ற போது அடுத்தடுத்து இரு கார்கள் மோதியது. படுகாயம் அடைந்த ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement