நிதி ஆலோசகர் தற்கொலை வழக்கு யூடியூபரிடம் போலீசார் விசாரணை
கானத்துார்: முட்டுக்காடு அருகே தற்கொலை செய்த நிதி ஆலோசகர் மற்றும் சமூக ஊடக பிரபலம் ஹரீஷ், 26 என்பவரின் மரணம் தொடர்பாக, யூடியூபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இ.சி.ஆர்., முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ், 26. இவர், ‘ஹரீஷ் கேபிட்டல் அண்ட் டிஜிட்டல் சர்வீஸ்’ என்ற பெயரில், ‘ஆன்லைன்’ நிதி ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரது பதிவை மையமாக வைத்து, ஜேசன் சாமுவேல் என்பவர், ‘டார்க் வேர்ல்டு ஆப் பைனான்ஸ் இன்ப்ளூயன்சர்ஸ்’ என்ற தலைப்பில், யூடியூப் சேனலில் ஹரீஷுக்கு எதிராக விமர்சித்தார். இதனால், சில நாட்களாக மனமுடைந்த காணப்பட்ட ஹரீஷ், நேற்றுமுன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கானத்துார் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ஹரீஷ் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில் அவர் பேசியிருப்பதாவது:
என் ஐந்தாண்டு உழைப்பை கெடுக்கும் வகையில், அவதுாறு பரப்புகின்றனர். என் மீது தவறு இருந்தால் என்னிடம் கேள்வி கேட்கலாம். என் குடும்பத்தினர் மீது அவதுாறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீ புதுச்சேரியை சேர்ந்தவன் தானே? அங்குள்ள முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை தெரியும் என, என்னை பற்றி வீடியோ வெளியிட்டவர் மிரட்டும் வகையில் பேசுகிறார்.
நீ பணம் கொடுக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும். உன்னை பற்றி எல்லாவற்றையும் எடுத்து வெளியிட்டு விடுவேன் எனக்கூறி இருக்கிறார். இதனால் என் நண்பர்களை பார்க்கும்போது எனக்கு குற்ற உணர்வாகவே உள்ளது. இதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இவ்வாறு அதில் பேசி உள்ளார்.
அதேநேரம், ஜேசன் சாமுவேலின் இணைய வழி துன்புறுத்தலே ஹரீஷை தற்கொலைக்கு துாண்டியதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, அவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு
-
தஞ்சாவூர் மண்ணெடுத்து பாடலை பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்
-
கரப்பான் கும்பலுக்கு டில்லி குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன்
-
முருகன் ராஜினாமா; காலியான எம்பி பதவிக்கு இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன்
-
இன்ஸ்டா பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கு; சக யூடியூபர் கைது
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது