சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் தொழிலாளி கைது

ஓசூர்: ஓசூர் அருகே, மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பாபுதாஸ், 38. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் தங்கியிருந்த, வடமாநிலத்தை சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச முடியாத, 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி, கடந்த, 10ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார்.

இதையறிந்து அங்கு சென்ற பாபுதாஸ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை, அச்சிறுமியின், 10 வயது தங்கை நேரில் பார்த்து, தன் தாயிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சிறுமியின் தாய், பாபுதாசிடம் கேட்டபோது அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

சிறுமியின் தாய் புகார்படி, ஓசூர் மகளிர் ஸ்டேஷன் போலீசார், பாபுதாசை நேற்று முன்தினம் இரவு, போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement