பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது
ராணிப்பேட்டை: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரு கிராமத்தை சேர்ந்த, 18 வயது நிரம்பாத இளம்பெண் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, ஆற்காட்டை சேர்ந்த பாஸ்கர், 44, என்பவர் பேட்டி எடுத்து, சிறுமியின் அடையாளத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் பரப்பினார்.
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி., சிபின் அறிவுறுத்தலில், போலீசார் வழக்குப்பதிந்து, பாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement