குப்பையில் கிடந்த நகையை ஒப்படைத்த துாய்மை பணியாளர்

1

திருச்சி: ஸ்ரீரங்கத்தில், குப்பையில் கிடந்த ஐந்த பவுன் நகையை எடுத்த திருச்சி மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியில், இன்று, துாய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, செல்வேந்திரன் ஆகியோர் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சுசீலா என்பவர் வீட்டில் சேகரமான குப்பையை, அவர்களிடம் கொடுத்துள்ளார். துாய்மைப் பணியாளர்கள் குப்பையை தரம் பிரித்த போது, சசீலா கொடுத்த குப்பையுடன், ஐந்து சவரன் செயின் இருந்துள்ளது.

அதே சமயம், வீட்டில் இருந்த செயினை காணவில்லை, என சசீலா தேடியதை அறிந்த துாய்மை பணியாளர்கள், உடனடியாக நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த துாய்மைப் பணியாளர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement