உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் எத்திராஜ் காலமானார்
சென்னை: வயது மூப்பு காரணமாக, உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் உம்மிடி எத்திராஜ், 99, சென்னையில் இன்று காலமானார்.
மிக பழமையான நகைகடைகளில் ஒன்றான ‘உம்மிடி பங்காரு’ ஜுவல்லர்ஸ் 1900ல் நிறுவனப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதிகார பறிமாற்றத்தை குறிக்கும் வகையில், ‘செங்கோல்’ வடிவமைக்க வேண்டும் என, திருவாவடுதுறை ஆதீனத்திடம் ராஜாஜி கேட்டுக்கொண்டார்.
அதன்படி, ‘உம்மிடி பங்காரு’ ஜூவல்லர்ஸில், 5 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல் வடிவமைக்கப்பட்டது. இந்த செங்கோலை, உம்மிடி பங்காரு குடும்பத்தை சேர்ந்த, உம்மிடி எத்திராஜ் வடிவமைத்தார்.
கடந்த 2023ம் ஆண்டு, டில்லியில் புதிதாக கட்டப்பட்ட பார்லிமென்டில், அந்த செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். இந்த நிகழ்வில், செங்கோலை வடிவமைத்த, அந்த குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி எத்திராஜ் கவுரவிக்கப்பட்டார்.
பெருமை மிக்க செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ், 1926ம் ஆண்டு நவ., 25ல் பிறந்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக, சென்னையில் இன்று அவர் காலாமானார். அவரது மறைவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
RIP. He would have turned 100 years of age, in 5 weeks time.